தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
329
இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப்
புடை நடு கல்லின் நாட் பலி ஊட்டி,
நல் நீராட்டி, நெய்ந் நறைக் கொளீஇய,
மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும்,
5
அரு முனை இருக்கைத்துஆயினும், வரி மிடற்று
அரவு உறை புற்றத்து அற்றே நாளும்
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை,
உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே.
திணையும் துறையும் அவை.
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:31:26(இந்திய நேரம்)