தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மதுரைப் பூதன் இளநாகனார்

மதுரைப் பூதன் இளநாகனார்
276
நறு விரை துறந்த நரை வெண் கூந்தல்,
இரங் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை,
செம் முது பெண்டின் காதலம் சிறாஅன்,
மடப் பால் ஆய்மகள் வள் உகிர்த் தெறித்த
5
குடப் பால் சில் உறை போல,
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே.
திணை அது; துறை தானை நிலை.
மதுரைப் பூதன் இளநாகனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:33:29(இந்திய நேரம்)