தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வெறி பாடிய காமக்கண்ணியார்

வெறி பாடிய காமக்கண்ணியார்
271
நீர் அறவு அறியா நிலமுதல் கலந்த
கருங் குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை,
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல்,
தொடலை ஆகவும் கண்டனம்; இனியே,
5
வெருவரு குருதியொடு மயங்கி, உருவு கரந்து,
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்து,
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்
மறம் புகல் மைந்தன் மலைந்தமாறே!
திணை நொச்சி; துறை செருவிடை வீழ்தல்.
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.

302
வெடி வேய் கொள்வது போல ஓடி,
தாவுபு உகளும், மாவே; பூவே,
விளங்குஇழை மகளிர் கூந்தல் கொண்ட;
நரந்தப் பல் காழ்க் கோதை சுற்றிய
5
ஐது அமை பாணி வணர் கோட்டுச் சீறியாழ்க்
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய,
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்,
10
விண் இவர் விசும்பின் மீனும்,
தண் பெயல் உறையும், உறை ஆற்றாவே.
திணை அது; துறை குதிரை மறம்.
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:40:24(இந்திய நேரம்)