திணை பாடாண்திணை; துறை
செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட்
கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு
பெறுவாயாக!' என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று
நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.
சேரமான் தகடூர் எறிந்த
பெருஞ் சேரல் இரும்பொறை முரசுகட்டில் அறியாது
ஏறிய மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயில்
எழுந்துணையும் கவரி கொண்டு வீசியானை மோசிகீரனார்
பாடியது.
தம்பியால் நாடு
கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக்
கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டு வந்து,
இளங் குமணற்குக் காட்டி, பெருந்தலைச் சாத்தனார்
பாடியது.