சோழன் நலங்கிள்ளி தம்பி
மாவளத்தானும் தாமப்பல் கண்ணணும் வட்டுப்
பொருவுழி, கை கரப்ப, வெகுண்டு வட்டுக் கொண்டு
எறிந்தானை, 'சோழன் மகன் அல்லை, என,
நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார்
பாடியது.
சேரமான் குடக்கோ நெடுஞ்
சேரலாதன் சோழன் வேற் பல் தடக் கைப் பெரு
நற்கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்து,
ஆரம் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தானைக்
கழாத்தலையார் பாடியது.