தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அழல் அவிர் வயங்கு

அழல் அவிர் வயங்கு
222
'அழல் அவிர் வயங்கு இழைப் பொலிந்த மேனி,
நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா' என,
என் இவண் ஒழித்த அன்பிலாள!
5
எண்ணாது இருக்குவை அல்லை;
என் இடம் யாது? மற்று இசை வெய்யோயே!
திணையும் துறையும் அவை.
அவனை, தன் மகன் பிறந்த பின் பெயர்த்துச் சென்று, பொத்தியார், 'எனக்கு இடம் தா' என்று சொற்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:44:48(இந்திய நேரம்)