இரங்கு முரசின், இனம்சால் யானை
இரங்கு முரசின், இனம்சால் யானை
இரங்கு முரசின், இனம்சால் யானை,
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவா அறியேனே;
நீயே, முன் யான் அறியுமோனே துவன்றிய
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது,
கழைக் கரும்பின் ஒலிக்குந்து,
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும்,
கண் அன்ன மலர் பூக்குந்து,
கருங் கால் வேங்கை மலரின், நாளும்
மணி அன்ன நீர் கடல் படரும்;
செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந!
சிறு வெள் அருவிப் பெருங் கல் நாடனை!
தாய் வாழியர், நிற் பயந்திசினோரே!
திணை அது; துறை இயன்மொழி; பரிசில்
துறையும் ஆம்.
நாஞ்சில் வள்ளுவனை ஒரு சிறைப்
பெரியனார் பாடியது.
புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:49:46(இந்திய நேரம்)