தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஈரச் செவ்வி உதவின

ஈரச் செவ்வி உதவின
289
ஈரச் செவ்வி உதவினஆயினும்,
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி,
வீறு வீறு ஆயும் உழவன் போல,
பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய
5
மூதிலாளருள்ளும், காதலின்
தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை,
'இவற்கு ஈக!' என்னும்; அதுவும் அன்றிசினே;
கேட்டியோ வாழி பாண! பாசறை,
'பூக் கோள் இன்று' என்று அறையும்
10
மடி வாய்த் தண்ணுமை இழிசினன் குரலே?
திணை ...............; துறை ................முல்லை.
கழாத்தலையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:54:03(இந்திய நேரம்)