தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உண்போன் தான் நறுங் கள்ளின்

உண்போன் தான் நறுங் கள்ளின்
347
உண்போன் தான் நறுங் கள்ளின் இடச் சில
நா இடைப் பல் தேர் கோலச் சிவந்த
ஒளிறு ஒள் வாடக் குழைந்த பைந் தும்பை,
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின்,
5
மணம் நாறு மார்பின், மறப் போர் அகுதை,
குண்டு நீர் வரைப்பின், கூடல் அன்ன
குவை இருங்கூந்தல் வரு முலை சேப்ப,
...........................................................................................................
என் ஆவதுகொல் தானே?.....................................
10
விளங்குறு பராரைய ஆயினும், வேந்தர்
வினை நவில் யானை பிணிப்ப,
வேர் துளங்கின, நம் ஊருள் மரனே.
திணையும் துறையும் அவை.
கபிலர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:55:14(இந்திய நேரம்)