தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உழுது ஊர் காளை ஊழ்

உழுது ஊர் காளை ஊழ்
322
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன
கவை முள் கள்ளிப் பொரி அரைப் பொருந்தி,
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன் தலைச் சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின்,
5
பெருங் கண் குறு முயல் கருங் கலன் உடைய
மன்றில் பாயும் வன் புலத்ததுவே
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது.
இருஞ் சுவல் வாளை பிறழும் ஆங்கண்,
தண் பணை ஆளும் வேந்தர்க்குக்
10
கண் படை ஈயா வேலோன் ஊரே.
திணையும் துறையும் அவை.
ஆவூர் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:56:02(இந்திய நேரம்)