தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விளங்கு மணிக் கொடும் பூண்

விளங்கு மணிக் கொடும் பூண்
130
விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய்! நின் நாட்டு
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ?
நின்னும் நின்மலையும் பாடி வருநர்க்கு,
இன் முகம் கரவாது, உவந்து நீ அளித்த
5
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க்
குட கடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த்திட்ட வேலினும் பலவே!
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:05:05(இந்திய நேரம்)