தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வெண்குடை மதியம் மேல்

வெண்குடை மதியம் மேல்
294
'வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ்தர,
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை,
குமரிப் படை தழீஇய கூற்று வினை ஆடவர்
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து,
5
இறையும் பெயரும் தோற்றி, நுமருள்
நாள் முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு' என,
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப, யாவரும்
அரவு உமிழ் மணியின் குறுகார்
நிரை தார் மார்பின் நின் கேள்வனை, பிறரே.
திணை தும்பை; துறை தானைமறம்.
பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:06:03(இந்திய நேரம்)