தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஓர் இல் நெய்தல் கறங்க

ஓர் இல் நெய்தல் கறங்க
194
ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
5
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.
திணை அது; துறை பெருங் காஞ்சி.
பக்குடுக்கை நன்கணியார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:08:37(இந்திய நேரம்)