தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கடும்பின் அடுகலம்

கடும்பின் அடுகலம்
32
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ?
'வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள்,
ஒள் நுதல், விறலியர் பூவிலை பெறுக!' என,
5
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்!
தொல் நிலக் கிழமை சுட்டின், நல் மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த
பசு மண் குரூஉத் திரள் போல, அவன்
10
கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே.
திணை பாடாண்திணை; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:13:22(இந்திய நேரம்)