தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

'கழிந்தது பொழிந்து' என

'கழிந்தது பொழிந்து' என
203
'கழிந்தது பொழிந்து' என வான் கண்மாறினும்,
'தொல்லது விளைந்து' என நிலம் வளம் கரப்பினும்,
எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை;
'இன்னும் தம்' என எம்மனோர் இரப்பின்,
5
'முன்னும் கொண்டிர்' என, நும்மனோர் மறுத்தல்
இன்னாது அம்ம; இயல் தேர் அண்ணல்!
இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும்,
உள்ளி வருநர் நசை இழப்போரே;
அனையையும் அல்லை, நீயே; ஒன்னார்
10
ஆர் எயில் அவர்கட்டாகவும், 'நுமது' எனப்
பாண் கடன் இறுக்கும் வள்ளியோய்!
பூண் கடன், எந்தை! நீ இரவலர்ப் புரவே.
திணையும் துறையும் அவை.
சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ் சேட்சென்னியை ஊன் பொதி பசுங்குடையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:15:33(இந்திய நேரம்)