தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

களர்ப் படு கூவல் தோண்டி

களர்ப் படு கூவல் தோண்டி
311
களர்ப் படு கூவல் தோண்டி, நாளும்,
புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை.
தாது எரு மறுகின் மாசுண இருந்து,
பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு
5
ஒருவரும் இல்லை மாதோ, செருவத்து;
சிறப்புடைச் செங் கண் புகைய, ஓர்
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே.
திணை அது; துறை பாண்பாட்டு.
ஒளவையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:16:20(இந்திய நேரம்)