தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கொடுங் குழை மகளிர்

கொடுங் குழை மகளிர்
304
கொடுங் குழை மகளிர் கோதை சூட்டி,
நடுங்கு பனிக் களைஇயர் நார் அரி பருகி,
வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி
பண்ணற்கு விரைதி, நீயே; 'நெருநை,
5
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஒராங்கு
நாளைச் செய்குவென் அமர்' எனக் கூறி,
புன் வயிறு அருத்தலும் செல்லான், வன் மான்
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன்
10
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று
'இரண்டு ஆகாது அவன் கூறியது' எனவே.
திணையும் துறையும் அவை.
அரிசில் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:22:48(இந்திய நேரம்)