தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சாறு தலைக்கொண்டென

சாறு தலைக்கொண்டென
82
சாறு தலைக்கொண்டென, பெண் ஈற்று உற்றென,
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று,
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
5
ஊர் கொள வந்த பொருநனொடு,
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே!
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:23:59(இந்திய நேரம்)