தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செந்நெல் உண்ட பைந் தோட்டு

செந்நெல் உண்ட பைந் தோட்டு
344
செந்நெல் உண்ட பைந் தோட்டு மஞ்ஞை,
செறி வளை மகளிர் ஓப்பலின், பறந்து எழுந்து,
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு,
நிறைசால் விழுப் பொருள் தருதல் ஒன்றோ
5
புகை படு கூர் எரி பரப்பிப் பகை செய்து,
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே,
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி..................
கணி மேவந்தவள் அல்குல் அவ் வரியே.
திணையும் துறையும் அவை.
...............அடைநெடுங் கல்வியார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:31:15(இந்திய நேரம்)