தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தீம் கனி இரவமொடு

தீம் கனி இரவமொடு
281
தீம் கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ,
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க,
கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி,
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
5
இசை மணி எறிந்து, காஞ்சி பாடி,
நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ,
காக்கம் வம்மோ காதலம் தோழி!
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம் பொறிக் கழல் கால் நெடுந்தகை புண்ணே.
திணை காஞ்சி; துறை பேய்க்காஞ்சி.
அரிசில் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:34:10(இந்திய நேரம்)