தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தோல் தா; தோல் தா என்றி

தோல் தா; தோல் தா என்றி
300
'தோல் தா; தோல் தா' என்றி; தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்;
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி,
அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன்,
5
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு
ஓர் இல் கோயில் தேருமால் நின்னே.
திணை தும்பை; துறை தானை மறம்.
அரிசில் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:36:30(இந்திய நேரம்)