தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நரம்பு எழுந்து உலறிய

நரம்பு எழுந்து உலறிய
278
'நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்,
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படை அழிந்து, மாறினன்' என்று பலர் கூற,
'மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என்
5
முலை அறுத்திடுவென், யான்' எனச் சினைஇ,
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா,
செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய
படு மகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே!
திணையும் துறையும் அவை.
காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:37:04(இந்திய நேரம்)