தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நறவும் தொடுமின்

நறவும் தொடுமின்
262
நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;
பாசுவல் இட்ட புன் கால் பந்தர்ப்
புனல் தரும் இள மணல் நிறையப் பெய்ம்மின்
ஒன்னார் முன்னிலை முருக்கி, பின் நின்று,
5
நிரையொடு வரூஉம் என்னைக்கு
உழையோர் தன்னினும் பெருஞ் சாயலரே.
திணை வெட்சி; துறை உண்டாட்டு; தலைத்தோற்றமும் ஆம்.
....................மதுரைப் பேராலவாயார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:38:25(இந்திய நேரம்)