தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நீலக் கச்சை, பூ ஆர் ஆடை

நீலக் கச்சை, பூ ஆர் ஆடை
274
நீலக் கச்சை, பூ ஆர் ஆடை,
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல் வருங் களிற்றொடு வேல் துரந்து, இனியே,
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்
5
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தர,
கையின் வாங்கி, தழீஇ,
மொய்ம்பின் ஊக்கி, மெய்க் கொண்டனனே!
திணை அது; துறை எருமை மறம்.
உலோச்சனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:43:20(இந்திய நேரம்)