தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நுதி வேல் கொண்டு நுதல் வியர்

நுதி வேல் கொண்டு நுதல் வியர்
349
நுதி வேல் கொண்டு நுதல் வியர் துடையா,
கடிய கூறும், வேந்தே; தந்தையும்,
நெடிய அல்லது, பணிந்து மொழியலனே;
இஃது இவர் படிவம்: ஆயின், வை எயிற்று,
5
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை,
மரம் படு சிறு தீப் போல,
அணங்கு ஆயினள், தான் பிறந்த ஊர்க்கே.
திணையும் துறையும் அவை.
மதுரை மருதன் இளநாகனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:43:32(இந்திய நேரம்)