தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பருத்தி வேலிச் சீறூர்

பருத்தி வேலிச் சீறூர்
299
பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி,
கடல் மண்டு தோணியின், படை முகம் போழ
நெய்மிதி அருந்திய, கொய் சுவல் எருத்தின்,
5
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி,
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலம் தொடா மகளிரின், இகந்து நின்றவ்வே.
திணை நொச்சி; துறை குதிரை மறம்.
பொன்முடியார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:46:17(இந்திய நேரம்)