தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிறர் வேல் போலாதாகி

பிறர் வேல் போலாதாகி
332
பிறர் வேல் போலாதாகி, இவ் ஊர்
மறவன் வேலோ பெருந் தகை உடைத்தே;
இரும் புறம் நீறும் ஆடி, கலந்து இடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;
5
மங்கல மகளிரொடு மாலை சூட்டி,
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப,
தெண் நீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து,
மண் முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு,
இருங் கடல் தானை வேந்தர்
10
பெருங் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே.
திணையும் துறையும் அவை.
விரியூர் நக்கனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:49:50(இந்திய நேரம்)