தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புலவரை இறந்த

புலவரை இறந்த
21
புல வரை இறந்த புகழ்சால் தோன்றல்!
'நில வரை இறந்த குண்டு கண் அகழி,
வான் தோய்வு அன்ன புரிசை, விசும்பின்
மீன் பூத்தன்ன உருவ ஞாயில்,
5
கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை,
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்,
கருங் கைக் கொல்லன் செந் தீ மாட்டிய
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது' என,
வேங்கை மார்பன் இரங்க, வைகலும்
10
ஆடு கொளக் குழைந்த தும்பை, புலவர்
பாடுதுறை முற்றிய, கொற்ற வேந்தே!
இகழுநர் இசையொடு மாய,
புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே!
திணையும் துறையும் அவை.
கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதியை ஐயூர் மூலங் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:50:01(இந்திய நேரம்)