தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெருங் களிற்று அடியின் தோன்றும்

பெருங் களிற்று அடியின் தோன்றும்
263
பெருங் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண்
இரும் பறை இரவல! சேறிஆயின்,
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது,
வண்டு மேம்படூஉம், இவ் வறநிலை ஆறே
5
பல் ஆத் திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து,
கல்லா இளையர் நீங்க நீங்கான்,
வில் உமிழ் கடுங் கணை மூழ்க,
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.
திணை கரந்தை; துறை கையறுநிலை.
......................................................................

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:51:02(இந்திய நேரம்)