தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மண் கொள வரிந்த

மண் கொள வரிந்த
288
மண் கொள வரிந்த வைந் நுதி மருப்பின்
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து,
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க,
5
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர,
நெடு வேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,
அருகுகை ...................................... மன்ற
குருதியொடு துயல்வரு மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே.
திணை தும்பை; துறை மூதில் முல்லை.
கழாத்தலையார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:53:35(இந்திய நேரம்)