தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மன்பதை காக்கும் நின் புரைமை

மன்பதை காக்கும் நின் புரைமை
210
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது,
அன்பு கண் மாறிய அறன் இல் காட்சியொடு,
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்,
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ;
5
செயிர் தீர் கொள்கை எம் வெங் காதலி
உயிர் சிறிது உடையள்ஆயின், எம்வயின்
உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால்,
'அறன் இல் கூற்றம் திறன் இன்று துணியப்
பிறன் ஆயினன்கொல்? இறீஇயர், என் உயிர்!' என
10
நுவல்வுறு சிறுமையள் பல புலந்து உறையும்
இடுக்கண் மனையோள் தீரிய, இந் நிலை
விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக் காண்:
அவல நெஞ்சமொடு செல்வல் நிற் கறுத்தோர்
அருங் கடி முனை அரண் போலப்
15
பெருங் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே.
திணையும் துறையும் அவை.
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங் குன்றூர் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:56:10(இந்திய நேரம்)