தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மனைக்கு விளக்கு ஆகிய

மனைக்கு விளக்கு ஆகிய
314
மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன்,
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந் தகை,
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை,
புன் காழ் நெல்லி வன் புலச் சீறூர்க்
5
குடியும் மன்னும் தானே; கொடி எடுத்து
நிறை அழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானே தன் இறை விழுமுறினே.
திணையும் துறையும் அவை.
ஐயூர் முடவனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:56:58(இந்திய நேரம்)