தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வணர் கோட்டுச் சீறியாழ்

வணர் கோட்டுச் சீறியாழ்
155
வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ,
'உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க?' என,
கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின்,
பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ
5
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு,
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
கொண் பெருங் கானத்துக் கிழவன்
தண் தார் அகலம் நோக்கின, மலர்ந்தே.
திணை அது; துறை பாணாற்றுப்படை.
அவனை அவர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:03:41(இந்திய நேரம்)