தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அணில்

அணில்
246
பல் சான்றீரே! பல் சான்றீரே!
'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட
5
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது,
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
10
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
15
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப் பாய்வாள் சொல்லியது.

307
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்;
வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்;
வேனல் வரி அணில் வாலத்து அன்ன,
5
கான ஊகின் கழன்று உகு முது வீ
அரியல் வான் குழல் சுரியல் தங்க,
நீரும் புல்லும் ஈயாது, உமணர்
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த
வாழா வான் பகடு ஏய்ப்ப, தெறுவர்
10
பேர் உயிர் கொள்ளும் மாதோ; அது கண்டு,
வெஞ் சின யானை வேந்தனும், 'இக் களத்து,
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல்' என,
பண் கொளற்கு அருமை நோக்கி,
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே.
திணை தும்பை; துறை களிற்றுடனிலை.
........................................................................

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:40:54(இந்திய நேரம்)