Primary tabs
                    1பாயிரத்தில் வான்சிறப்பு, அறத்துப்பாலில்
                    இல்லறவியல், பொருட்பாலில் அரசியலொழிந்த பகுதிகள்,
                    இன்பத்துப்பாலிற் சில கற்பியலதிகாரங்கள் ஆகியவை
                    எல்லார்க்கும் பொதுவாம்.
                     
                  
                    தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
                    பெய்யெனப் பெய்யு மழை, (55)
                  
                    அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
                    பொறுத்தானோ டூர்ந்தா னிடை. (37)
                  
                    படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு
                    முடையா னரசரு ளேறு. (381)
                  
                    இலமென் றசைஇ யிருப்பாரைக் காணி
                    னிலமென்னு நல்லாள் நகும். (1040)
                  
                    வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா
                    மெலியார்மேல் மேக பகை. (891).
                     
                  
                    புதிதாக வந்தவரையும் வழிச்செல்வோரையும்
                    விருந்தோம்பல்
                    காட்டிலிருந்து கடுந்தவஞ் செய்தல்.
                    குன்றேறி யானைப்போர் காண்டல்.
                    பெண்டிர் கண்ணிற்கு மைதீட்டல்.
                    காதலன் மடலேற்றம்.
                     
                  
                    அருகற் பூமேல் நடந்தது.
                    வேந்தன் (இந்திரன்) முனிவனது ஆற்றலுக்குச்
                    சான்றானது.
                    திருமால் மூவுலகும் ஈரடியா லளந்தது (?)
                     
                  
                    திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகட்குமுன்பு
                    தமிழகத்துப் பிறந்து வாழ்ந்தவரே யாயினும் ,
                    இவ்வுலக மெங்குமுள்ள அறுவகையுயிரிளும்
                    எக்காலத்தும் இன்புற்று நீடுவாழவேண்டுமென்பதே
                    அவர் திருவுள்ளமாம்.
                     
                  
 
						