தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai


புறநட் டகத்தே வேர்ப்பான் பகைமை
வெளியிட் டுடனே வேறாதல் வேண்டும்
இதுதமி ழகமே இதில்தலை தமிழே
ஆரிய மென்னும் பூரிய மொழியை
அகற்றித் தமிழை அரியணை யேற்றுவீர்
கோயில் வழிபாடுங் கொண்டாடு மணமும்
வாயில் மொழிதமிழ் வழங்குதல் வேண்டும்
விண்ணக மொழியும் விண்ணக மாந்தரும்
மண்ணகம் வழங்கும் முறைமை யில்லை
சிவனியம் மாலியம் எனுமிரு மதங்களும்
செந்தமி ழோரே கண்ட நெறியாம்
என்ன பெயரும் இன்றமி ழாக்கிக்
கன்னித் தமிழன் கற்பைக் காமின்
உங்கள் போன்றே உடலும் உறுப்பும்
உள்ள அமெரிக்கர் வெள்ளிடை நீந்தித்
திங்கள் சென்று திரும்பினர் பன்முறை
அடுத்த மனையுளும் அடியிட லின்றி
அடிநிலைத் தாழ்வில் அமிழ்ந்துளீர் நீரே
முதன்முதற் பொறிவினை முகிழ்த்தனர் நும்முனோர்
மதிநீர் முதற்சென் றிருத்தல் வேண்டும்
திருவள்ளுவரீ ராயிர வாண்டைப்
பெருவிளம் பரமாய்ப் பேணிக்கொண் டாடினிர்
அதனா லெதும்பய னானது முண்டோ
எள்ளள வும்அவர் சொல் லேற்றீரோ
பிறப்பொடு தொடுத்த குலப்பிரி வினையாற்
கூண்டுள் விலங்குகள் போன்றடை பட்டே
ஒற்றுமை குலைந்தும் உரனை யிழந்தும் 
இனவுணர் வழிந்து மொழியுணர் வின்றிச்
சிறுமை நிலையிற் பெருமை கொண்டீர்
ஆரியன் பிறப்பா லுயர்ந்தா னல்லன்
அவனிலும் வெள்ளையர் ஐரோப் பியரே
தட்ப வெப்பத் தன்னால் நாட்டு
மக்கள் நிறமும் மாறுவ தியற்கை
ஒன்றே குலமும் உடன்பிறப் பனைவரும்
நிலத்தேவ ரென்றொரு குலத்தோரிங் கில்லை
குடிமதிப் பிலும்பிற குறிப்புக் களிலும்
தமிழன் என்றே தன்குலங் குறிக்க
வடமொழி தேவ மொழியு மன்றாம்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:01:18(இந்திய நேரம்)