தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

ஓரடி முக்கா லுரைத்ததிரு வள்ளுவனார்
ஈரடி முக்காலு மே. (பெருந்தொகை 2000)

"அவனே புலவ னவனே யறிஞன்
அவனே தமிழை யறிந்தோன்- சிவனறிய
வள்ளுவ தேவன் வசனத்தை மெய்யாக
வுள்ளுவ தேவ னுளன்." (பெருந்தொகை 2001)

"வாழிமழை யானினங்கள் வாழிமழை யாகமங்கள்
வாழிமனு நீதிமன்னர் மன்பதைகள்- வாழியரோ
வுள்ளுகுறட் செந்தேன் செவிகுளிரப் பெய்தமுகில்
வள்ளுவர் பாத மலர்." (பெருந்தொகை 2002)

"மாயோன் வடிவம் போல வேள்வியின்
முன்னொரு குறளுரு வாகிப் பின்னது
மூவடி முறைமையிற் செல்லாது தாந்தம்
ஈரடி யியக்க நிரம்பாவளவையின்
உலக மூன்று மளந்தன
புலவன் வள்ளுவன் குறள்வெண் பாட்டே" (பெருந்தொகை 2003)

"வள்ளுவர்சீர் அன்பர்மொழி வாசகம்தொல் காப்பியமே
தெள்ளுபரி மேலழகன் செய்தவுரை-ஒள்ளியசீர்த்
தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும்
தண்டமிழின் மேலாந் தரம்."- உமாபதி சிவாசாரியார்.

"நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின் ஈசன்
கழலருமை வெவ்வினையிற் காண்மின்-பழகுதமிழ்ச்
சொல்லருமை நாலிரண்டிற் சோமன் கொடையருமை
புல்லரிடத் தேயறிமின் போய்,"-ஒளவையார்.

9. திருவள்ளுவ மாலை

இப்பாடற்றிரட்டு கடைக் கழகப் புலவராற் பாடப்பட்டதன்று.பிற்காலத்து ஆரியச்சார்பான ஒருவரோ ஒரு சிலரோ அவர்பெயரிற் பாடிவைத்ததாகும்.இதற்குச் சான்றுகள்:-

1. உடம்பிலி (அசரீரி) யுரையும் நாமகள் கூற்றும் இறைவன் பாராட்டும் என்று முப்பாக்கள் கலந்திருத்தல்.

2.இறையனாரகப் பொருளுரைக் கட்டுக் கதையிற் கூறப்பட்டுள்ள உருத்திரசன்மன் என்னும் ஐயாட்டை மூங்கைப் பிராமணச் சிறுவன், திருவள்ளுவரோடு ஒக்கவிருக்கவென்று வானுரையெழுந்ததாகக் கூறப்பட்டிருத்தல்.
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:13:59(இந்திய நேரம்)