தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

7
நில்லுநில் லென்று சொன்னீர் நேசபா சங்க ளைந்தும்
புல்லறி வோடும் வாங்காப் புலைகொலை களவு மற்றுச்
சொல்லுதற் கரிய ஞானச் சுழிமுனை முடியின் மீதில்
எல்லையுங் கடந்தே யப்பா லேகமா னவர்க ணிற்பார்.
8
இருமிரு மென்று சொன்னீ ரேற்குமோ வேழை யேற்குத்
தருபொரு ளுணர்ந்து சைவ சமயமு மனைத்து நீங்கி
மருடரு வினையு நீங்கி மாசிலா வுண்மை ஞானம்
பொருந்தின ரிருப்பர் பின்பு பொறாதவ ரிறப்பர் தாமே.
9
போமென வுரைத்தீ ரென்னைப்பொறியொடு புலன்க ளைந்தும்
ஆமெனு மவிச்சை யோடு மங்ஙனே மதித்துக் கொண்டே
ஏமமுஞ் சாம மற்றே யிரவொடு பகலு மற்றுச்
சோமனார் பதியை விட்டுத் துறந்தவர் போவ ரன்றே.
10
அடிசிற் கினியாளே யன்புடை யாளே
படிசொற் கடவாத பாவாய்- அடிவருடிப்
பின்றூங்கி முன்னெழூஉம் பேதையே போதியோ
என்றூங்கு மென்க ணிரா.
11
குறுமுனிவன் முத்தமிழு மென்குறளு நங்கை
சிறுமுனிவன் வாய்மொழியின் சேய்.

இவற்றுள், 'அடிசிற் கினியாளே' என்பது திருவள்ளுவரே பாடியதாக இருக்கலாம்.
 

8. திருவள்ளுவரையும் திருக்குறளையும் 
   பற்றிய சிறப்புப் பாக்கள்.

 

"குறுமுனிவன் கோத்தெடுத்த கொற்சேரி யூசி
உறுவிலைக்கு விற்றதனோ டொக்கும் - தெறுகலியைச்
செற்றவேன் மாற திருவள் ளுவர்வாய்ச்
சொற்றகுமுப் பால்வாழ்த்துச் சொல்." (பெருந்தொகை. 1998)

"முப்பாலு முண்டோ முலைப்பா லினிநுகரோம்
அப்பாலுக் கப்பாலு மாயிருக்கும் - எப்பொருளும்
உள்ள படியுணர்ந்தோ மோதிக் குறைதீர்ந்தோம்
வள்ளுவனார் வைப்பெமக்கு வைத்து." (பெருந்தொகை 1999)

"எப்பாலு மேத்துவா மின்பம் பொருளறமா
முப்பாலு மாயிரத்து முந்நூற்று முப்பதா
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:13:50(இந்திய நேரம்)