தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

தோல் என்பது தொல்காப்பியச் சொல்லா வேறா என்னும் ஐயுறவிற்கிடமானதாம். அளறு பொருள் பற்றியும் வரன் என்பது வடிவு பற்றியும் சிறப்பாம். கோட்டிகொளல், சோகா என்பன துணைவினை பற்றியே சிறப்பாம்.
7. திருவள்ளுவர் பெயரிலுள்ள தனிப்பாடல்கள்
(தனிப்பாடற்றிரட்டு- முதற்பாகம்)
1
எவ்வுயிருங் காக்கவோ ரீசனுண்டோ இல்லையோ
அவ்வுயிரில் யானொருவ னல்லனோ - வவ்வி
அருகுவது கொண்டிங் கலைவதே னன்னே
வருகுவது தானே வரும்.
2
பூவி லயனும் புரந்தரனும் பூவுலகைத்
தாவி யளந்தோனுந் தாமிருக்க - நாவில்
இழைநக்கி நூனெருடு மேழை யறிவேனோ
குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து.
3
ஐயரென் றுரைத்தீர் நாயேற் கடுக்குமோ வருளி லேனை
பொய்யொடு களவுமற்றுப் புலன்களை யொடுக்கிக் கொண்டு
உய்யவே புலன்களைந்து முயர்பர வெளியுள் ளாக்கி
வெய்யவன் மதியம் போல விரவுவ ரைய ராவர்.
4
ஞானவா னென்று சொன்னீர் நாதவிந் துவுங் கடந்து
கானலை வரையுஞ் சுட்டுக் கடுவெளி பரமா நந்தந்
தானெனு மவையி ரண்டுந் தவிர்ந்துதன் வசமுங் கெட்டு
மோனமுங் கடந்தே யப்பான் முடிந்தவர் ஞானி யாவர்.
5

சாதியிலே தொண்ணூற்றென் பாணாஞ் சாதி

சமயத்திற் பதின்மூன்றஞ் சமய மாகும் 

நீதியிலே சிவனுடைய நீதி யாகும்

நிலைமையிலே வேதாந்த நிலைமை யாகும்

ஆதியிலே யெங்களுர் கருவூ ராகும்

அந்தத்திற் போயடைவோம் பேரூர் தன்னில்

சோதியிலே பரஞ்சோதிக் கூட்ட மாகும்

சொல்லுதற்கு மெங்குலஞ்சுக் கிலம தாமே.

6
எந்தவூ ரென்றீ ரிருந்தவூர் நீர்கேளீர்
அந்தவூர்ச் செய்தி யறியீரோ- அந்தவூர்
முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்
அப்பாலும் பாழென் றறி.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:13:41(இந்திய நேரம்)