தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukkural-அதிகார அருஞ்சொற் பொருள் அகர வரிசை


அதிகார அருஞ்சொற்பொருள் அகரவரிசை
 
1
அலர் அறிவுறுத்தல்
-
ஊரார் கேலி புரிதல்
2
அவர்வயின் விதும்பல்
-
காதலரைக் காணத்துடித்தல்
3
அவா அறுத்தல்
-
பேராசை விலக்கல்
4
அழுக்காறாமை
-
பொறாமை கொள்ளாமை
5
ஆள்வினை உடைமை
-
முயற்சியின் சிறப்பு
6
இகல்
-
மாறுபாடு - பகை
7
இடனறிதல்
-
ஏற்ற இடம் அறிதல்
8
இடுக்கண் அழியாமை
-
துன்பத்திற்குக் கலங்காமை
9
இரவு
-
இரத்தலின் தன்மை
10
இரவச்சம்
-
இரத்தலுக்கு அஞ்சுதல்
11
இறைமாட்சி
-
அரசின் சிறப்பு
12
இன்னா செய்யாமை
-
துன்பம் செய்யாமை
13
உறுப்புநலன் அழிதல்
-
அழகு குலைதல்
14
ஒப்புரவறிதல்
-
சமுதாய நலம் நாடுதல்
15
ஒற்றாடல்
-
ஒற்றர்களின் சிறப்பு
16
கண்ணோட்டம்
-
இரக்கம் காட்டும் பண்பு
17
கண் விதுப்பழிதல்
-
கண் படுத்தும் பாடு
18
கயமை
-
கீழ்மை
19
கள்ளாமை
-
திருடாமை
20
குடிமை
-
குடிச்சிறப்பு
21
கேள்வி
-
கேட்டல்
22
சிற்றினம் சேராமை
-
சிறுமையாளருடன் சேராமை
23
சுற்றந்தழால்
-
சுற்றத்தாரைச் சேர்த்துக் கொள்ளல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:21:37(இந்திய நேரம்)