Primary tabs
ஐந்திணைச்செய்யுள்
உரிப்பொரு
டோன்ற ஒரைந் திணையும்
தெரிப்ப தைந்திணைச் செய்யு ளாகும்.
(இ-ள்.) புணர்தல் முதலிய ஐந்து ஒழுக்கமும் விளக்கும் குறிஞ்சி முதலிய ஐந்து திணையினையும் தெரித்துக் கூறுவது ஐந்திணைச்செய்யுளாம். (இலக்கண விளக்கம் - பாட்டியல் - 89 - சூ.)
7. ஐந்திணையைம்பது - மாறன் பொறையனார் இயற்றியது. ஒவ்வோர் அகப்பொருட்டிணைக்கும் பப்பத்தாகப் பாடிய ஐம்பது வெண்பாக்களை யுடையது.
8. திணைமொழியைம்பது - சாத்தந்தையார் மகனார் கண்ணஞ் சேந்தனார் இயற்றியது. ஒவ்வோர் அகப்பொருட்டிணைக்கும் பப்பத்தாகப் பாடிய ஐம்பது வெண்பாக்களை யுடையது.
9. ஐந்திணையெழுபது - மூவாதியார் இயற்றியது. அகப்பொருளைந்திணைக்கும் பதினான்கு பதினான்காகப் பாடிய எழுபது வெண்பாக்களை புடையது.
10. திணைமாலை நூற்றைம்பது - மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் மாணாக்கர் கணிமேதாவியர் இயற்றியது. அகப்பொரு ளைந்திணைக்கும் முப்பத முப்பதாகப் பாடிய தூற்றைம்பது வெண்பாக்களை யுடையது.
11. முப்பால் - திருக்குறள் (திருவள்ளுவப்பயன்) - திருவள்ளுவநாயனார் இயற்றியது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பாலாய், நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களாய், ஆயிரத்து முந்நூற்றுமுப்பது குறள் வெண்பாக்களை யுடையது. பரிமேலழகர் உரை பயில வழங்குகின்றது. இந்நூலின் பெருமையை உணர்த்துவது திருவள்ளுவமாலை.
12. திரிகடுகம் - நல்லாதனார் இயற்றியது. மும்மூன்று பொருள்களை விளக்கும் வெண்பாக்கள் (கடவுள் வாழ்த்துட்பட) நூற்றொன்றுடையது. திருக்கோட்டியூர் இராமாநுசாசாரியர் உரை பயில வழங்குகின்றது.