Primary tabs
மாயோனையும், பலராமனையும், வேள்வித் தீயையும், கார்த்திகை விளக்கீட்டையும் இவ்வாசிரியர் குறித்திருப்பது கருதற்பாலது.
இந்நூற்குப் பழைய பொழிப்புரை யொன்றுளது. அவ்வுரை 23 முதல் 38 வரையுள்ள பாடல்களுக்குக் கிடைத்திலது. சின்னாளின் முன்னரும் சிலர் உரையெழுதி யிருக்கின்றனர். அவற்றுள் காலஞ்சென்ற திருவாளர் B.S. இரத்தினவேலு முதலியார் அவர்கள் எழுதிய விருத்தியுரை முச்சங்கம், பதினெண் கீழ்க்கணக்கு, அகப்பொருளியல் என்பன முதலிய ஆராய்ச்சிகளையும் கொண்டிருப்பது. நம் தமிழன்னையின் அழகைப் பல்லாற்றானும் மிளிரச்செய்து வருகின்ற திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரின் விருப்பத்திற் கிசைய இவ்வுரை என்னால் எழுதப் பெறுவதாயிற்று. இதில் காணப்படும் குற்றங் குறைகளைப் பொறுத்தருளுமாறு அறிஞர்களை வேண்டிக் கொள்கின்றேன்.
"ஞால நின்புக ழேமிக வேண்டும்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே."
இங்ஙனம் :
ந. மு. வேங்கடசாமி.