அருஞ்சொல் விளக்க
அகரவரிசை
அலைக்களம் - வருத்தந்தரும் சிறைச்சாலை
12
ஆடாமை - பயனில் சொற் பேசாமை
13
இடம்பட - கருத்துக்கள் தெளிவுற
8
இறந்தார் - கல்வி முதலிய வற்றாற் சிறந்தார்
16
ஈர்மணி - குளிர்ந்த மணி
67
ஈன்கால் - பிள்ளை பெறும் பொழுது
55
உடன்றார் - பிணியில் வருந்துவோர்
8
எஞ்சினார் - மீந்துளோர்
31
ஐங்களிறு - ஐம்பொறிகளெனும் யானைகள்
11
ஓர்வம் - ஒருபாற் சார்தல்
61
கருஞ்சிரங்கு - கருங்கிரந்தி
57
கலவி - உலகத்தோடு கலத்தல் உலகப்பற்று
4
காம் - காமம் என்பதின் சுருக்கம்
58
கார்ப்பார் - வெறுக்கப்பட்டார்
54
தளை - விலங்கு காற்பூட்டு
56
தூப்பு - தூய்மை சுத்தம்
54
நாவலந்தீவு . இந்தியநாடு
56
புரக்கும் - வளர்க்கும்
30
புழை - புலம் தங்குமிடம்
11
மகரம் - சுறாமீன் வடிவுடைய காதணி
43
மண்டிலம் - பிறவிச் சுழல்
72
மறுதலை - தீமை (இவண் தீமை செய்வார்)
16
மறுதலையார் - வெளியூரார்
71
மாற்று அரவம் - பகைவர் சொல்
48
மான்வேட்டம் - விலங்குகளை வேட்டையாடல்
18
முச்சாரிகை - தேர் யானை குதிரை
12
முருந்து - மயிலிறகின் அடி
7
மென்பு - மென்மைமிகு புலமைத்திறன்
68
யாக்கும் - பழக்குவிக்கும்
12
வயிற்றுத்தீ - வயிற்றெரிச்சல் யானைத்தீ என்னும் கடும் பசியுமென்பர்
57
வழிப்புரை - வழிப்போக்கர் தங்குமிடம்
51
வழிவந்தார் - உயர்குடிப் பிறந்தார்
1
வார்குத்து - வெள்ளநீர் தங்கிச் சுழியெழும்
நீர்நிலை
12
வானகத்தார் - வானுலகத்திலுள்ளார் இவண் தென்புலத்தார்
71
விண்டவர் - உலகப் பற்றுக்களை நீக்கியவர் சான்றோர்
4
வீழப்படுவர் - விரும்ப்பப்படுவர்
36
வெங்கோலான் - கொடுங்கோலரசன்
10
வெஃகல் - பிறர் பொருள் கவர்தல்
27
வேற்று அரவம் - தீச்சொல்
49