தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நூலாசிரியர் வரலாறு


23 

நூலாசிரியர் வரலாறு

சீவக சிந்தாமணி என்னும் இந்த ஒப்பற்ற வனப்பு நூலைச் செய்தருளியவர் திருத்தக்கதேவர் என்ப. இவர் திருத்தகுமுனிவர், திருத்தகு மகாமுனிவர், திருத்தக்க மகாமுனிகள் என்னும் பெயர்களாலும் வழங்கப்படுவர். நமது செந்தமிழ்ப் புலவர்களிலே தேவர் என்னும் பெயர் மூன்று புலவர்களைக் குறிக்கும். அவர் திருவள்ளுவனார், திருத்தக்கதேவர், தோலாமொழி ஆகிய மூவருமாம். ஆயினும் தேவர் என்னும் இந்தப் பெயர் திருத்தக்க தேவர்க்கே சிறந்துரிமையுடையதாகும்.

திருத்தக்கதேவர் சோழர்குலத் தோன்றல் என்று கூறப்படுகின்றார். இவர் காலம் கி. பி. இரண்டாம நூற்றாண்டிற்கும் ஏழாம் நூற்றாண்டிற்கும் இடைநிகழ்ந்த காலத்தில் ஒரு பகுதியாக விருக்கக்கூடும் என்று தெரிகிறது. இவர் அந்தக் காலத்திலே தமிழகத்திலே பெரிதும் செல்வாக்குற்றிருந்த ஆருகத சமயத்தைச் சார்ந்தவராவார். மேலும் இளமையிலேயே இவர் துறவியாகி யிருந்தவர். பல கலையும் கற்றுத் தேர்ந்து அறிவுக்கடலாகத் திகழ்ந்தவர்.

திருத்தக்கதேவர் சான்றோரிணக்கம் கருதி மதுரை மூதூரை யடைந்து ஆங்குச் சங்கப்புலவர்களோடு கூடி அளவளாவி யிருந்தனர் என்றும், அப்பொழுது ஆங்கிருந்த தமிழ்ப்புலவருட் சிலர் ஆருகத சமயத்தவர் துறவு முதலியவற்றைப் பாடுவரேயன்றிக் காமச்சுவை கெழுமிய காப்பியம் பாடவறியார் என்று கூறினர் என்றும், அது கேட்ட தேவர் தாம் அக் குறையை யகற்றக்கருதிக் காமச்சுவை மிக்க இச் சீவக சிந்தாமணியை இயற்றிப் பெரும்புகழ் எய்தினர் என்றும் ஒரு வரலாறு கேட்கப்படுகின்றது.

இன்னும் காப்பியம் செய்யக் கருதிய தேவர் தங் கருத்தினைத் தம் ஆசிரியர்க்குக் கூறியபொழுது அந்த ஆசிரியர் தேவருடைய புலமையாற்றலை அளத்தற் பொருட்டு அப்பொழுது ஆங்கே ஓடிய ஒரு நரியைச் சுட்டிக்காட்டி ‘நீர் காவியம் பாடு முன்னர் இந்த நரியைப் பொருளாகவைத்து ஒரு சிறு நூல் இயற்றிக் காட்டுக' என்று பணித்தனர் என்றும், தேவரும் அப்பொழுதே ஆசுகவியாக விரைந்தொரு சிறு நூல் பாடி அதற்கு நரி விருத்தம் என்று பெயரிட்டு ஆசிரியர்க்குக் காட்டினர் என்றும், அந்நூலின் அருமையுணர்ந்த ஆசிரியர் ‘இனி நீயிர் நினைந்தபடியே பெருங்காப்பியஞ் செய்க ! ’ என்று பணித்தனர் என்றும், அப்பணி தலைமேற்கொண்டு தேவர் அப் பெருங்காப்பியத்திற்குக் கடவுள் வாழ்த்துப் பாடி வழங்கும்படி ஆசிரியரை வேண்ட


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 08:02:04(இந்திய நேரம்)