Primary tabs
முன்னுரை
பெருங்கதையின் இரண்டாவது காண்டமாகிய இலாவாண காண்டம் தமிழ் வித்துவான் வகுப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றமையால் முதற்கண் இலாவாண காண்டத்திற்குப் பொழிப்பும் விளக்கமுமாக உரை வரையலாயிற்று. அவ்விலாவாண காண்டம் 1956 ஆம் ஆண்டு
கழகத்தாரால் வெளியிடப்பட்டது. பின்னர் அம் முறையே பற்றி எஞ்சிய உஞ்சைக் காண்டம் முதலிய காண்டங்கட்கும் தொடர்ந்து உரை வகுத்தேன். கழகத்தார் இப்பொழுது உஞ்சைக் காண்டத்தை வெளியிடுகின்றனர். ஏனைய காண்டங்களும் அச்சிடப்பெறுகின்றன. எளியேனை இவ்வுரைப் பணியில் ஈடுபடுத்திவரும் எம் அம்பல வாணர் திருவடிகளை வழுத்துகின்றேன்.
19-9-1962.
பொ. வே. சோமசுந்தரன்