Primary tabs
முற்றிலும் சென்னைக் கம்பன் கழகப் பதிப்பின்படியே பின்பற்றப்பட்டுள்ளது.
தாள் விலையும் அச்சுக் கூலியும் நாளும் நாளும்ஏறிக்கொண்டே யிருப்பினும், இந்த உரைப் பதிப்பு அடக்கவிலைக்கே வழங்கப்படுகிறது. கம்பன் அறநெறிச் செம்மல்திரு.ஜி.கே. சுந்தரம் அடக்க விலைக்கே வெளியிடவேண்டுமென்று முடிவு செய்தார்கள்.
காலமும் கணக்கும் நீத்த காரணன் கருணையால் நடைபெறும்இந்தத் திருப்பணிக்கு உதவிவருகின்ற புரவலர்களுக்கும்புலவர்களுக்கும் உளமார்ந்த நன்றி. அப்பெருமக்களுக்கு எல்லாநலன்களும் இனிதே அமைய இறைவன் அருள்வானாக.
அச்சுப் பணியை ஏற்றுத் திறம்படச் செய்யும் வர்த்தமானன்அச்சகத்தார்க்கும் பதிப்பாசிரியர் அ.ச.ஞா.வுக்கும்சிறப்பாக நன்றி சொல்ல வேண்டும்.
இத் திருப்பணி மேலும் சிறப்புற்று நிறைவெய்திட ஆங்காங்குஉள்ள கம்பன் கழகத்தினரும் கல்வி நிலையங்களும் உதவிக்கரம் நீட்டியுதவ வேண்டுகிறோம். இது பொதுப்பணி, தமிழ்ப்பணி, திருப்பணி.