Primary tabs
உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
பாதிக்கு மேல்
பெருமான் திருவருள் துணையாலும் புரவலர்கள் கொடையாலும்சான்றோர் வாழ்த்தாலும் புலமைச் செல்வர்கள்ஒத்துழைப்பாலும் கம்ப ராமாயண விளக்க உரைப் பணி செவ்வனேநடைபெற்று வருகிறது. பாதிக்குமேல் வெளியீட்டுப் பணிமுடிந்து, அதன் மேலும் தொடர்கிறது.
கம்ப ராமாயணத்தின் ஆறாவது காண்டமாகிய யுத்த காண்டம்காப்பியத்தில் பாதிக்குமேல் பரவி நிற்பது. (விவரம்பேரா. அ.ச.ஞா. முன்னுரையில் காண்க.) நம் பதிப்பில்மூன்று தொகுதிகள்.
இப்பதிப்பின் வரலாறு முதலிய விவரங்களை முன் வெளிவந்தகாண்டங்களில் காணலாம்.
உரையாசிரியர்கள் வரைந்துதவிய விளக்க உரையைவரிவரியாகப் படிக்கக் கேட்டு, உரிய மாற்றங்களையும்திருத்தங்களையும் செய்தபின்னரே அச்சகத்துக்குஅனுப்புகிறார். இந்தப் பணியின் முதன்மைப்பதிப்பாசிரியராகிய அ.ச.ஞா.வுக்கு உதவியாக இருப்பவர்கள்டாக்டர் ம.ரா.போ. குருசாமி, டாக்டர் திருமதி. தரணிபாஸ்கர், மூதறிஞர் வே. சிவசுப்பிரமணியம் ஆகியோராவர்.
மூலத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் சென்னைக்கம்பன் கழகப் பதிப்பே பின்பற்றப்படுகிறது;உரையாசிரியர்கள் ஆய்வுணர்வுக்குப் பொருத்தம் என்று பட்டஇடங்களில் பாட பேதம் இப்பதிப்பில் இடம் பெற்றுள்ளது.பாடல் நிரல் எண்