தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Bharatham

xiv

சிறப்புப்பாயிரம்

12.
கரும்புங்கமுகுந்தலைதெரியாக்கழனிச்செந்நெற்களையாகி
யரும்புங்குவளைநறுமலர்த்தேனாறாயெங்குஞ்சேறாக
விரும்புஞ்சுருதியிசைகேட்டுவேலைக்கழிக்கானலங்கைதை
சுரும்புந்தும்பிகளுமருந்தமாறாதென்றுஞ்சோறிடுமால்.

வேறு.

13.
கம்பலைக்கழனிச்சேனைக்காவலர்கரங்கணீக்கிப்
பைம்புலத்துழுநர்தங்கள்பலவகைவிளைவுமீட்டி
ஐம்புலத்தவர்க்குமீந்தாங்கறத்தினைவளர்த்தலாலே
செம்புலக்கிழத்திக்காவியன்னதச்செல்வநாடே.

வேறு.

14.
எண்ணுமாகடலேழுமன்றிருகடலாகப்
பெண்ணைமாநதிநறுநெய்பால்பெருகுமப்பழனப்
பண்ணைநீள்வளம்பல்குசீர்ப்பழையநன்னாட்டில்
வண்ணநான்கினுமுயர்ந்துளோனொருமுனிவந்தான்.
15.
ஐந்துபாவுடைநால்வகைக்கவிக்கதிபதியாய்
வந்துவட்டமாமணியினன்மணிமுடிபுனைந்து
பைந்துழாய்முடிப்பரமனைப்பலகவித்துறையுஞ்
சிந்தையான்மொழிந்தன்பர்தந்திருவுளம்பெற்றோன்.

12. நீர்வளத்தாலான நிலவளம்: தலைதெரியா - வேற்றுமை தெரியாத.
கானல் - கடற்கரை.கைதை - தாழை: இதனிடத்து ஒரு பிரபுவின்தன்மை
தொனிக்கும். சுருதியிசை -சுருதியோடுகூடிய இசை. சோறு - உணவு என்ற
பொருளும்தோன்றும்: தாழையினுட்பகுதி சோறு எனப்படும்; மகரந்த மென்றாரு
முளர்.

13. நாட்டுச்சிறப்பு: சேனைக்காவலர்கரங்கள் - சேனையையுடைய
மன்னவர்க்கு உரியவரிப்பொருள்கள். ஐம்புலத்தவர் - தென்புலத்தார், தெய்வம்,
விருந்து, ஒக்கல்,தான் என்பவர். புலக்கிழத்தி - நிலமகள்.

14.அந்நாட்டில் வில்லிபுத்தூரார் தோன்றியமை: வண்ணம் நான்கு -
பிராமணர்க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்பன. கடலேழு உவரி -
கருப்பஞ்சாறு தேன்நெய் தயிர் பால் நன்னீர் இவற்றின் மயமானவை.

15.மூன்று கவிகள் வில்லிபுத்தூராரின் சிறப்பு: ஐந்துபா - வெண்பா
ஆசிரியப்பாகலிப்பா வஞ்சிப்பா மருட்பா என்பன. நால் வகைக்கவி ஆசு
மதுரம் சித்திரம்வித்தாரம் என்பன. கவிக்கதிபதியாதற்கேற்ற
முடிபுனைந்துள்ளானென்க.அன்பர்தந் திருவுளம் பெற்றோன் என்றது,
திருமாலடியார்களால் இவன் சிறந்தஅடியவனென்று மதிக்கப்பெற்றவ னென்றபடி.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-10-2017 11:10:17(இந்திய நேரம்)