தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


வேண்டும்; முதலடியிற் கூறிய பொருள் இரண்டாமடிக்குக் கூறுதல் பொருந்தாது. சொற்றொடர் ஒன்றாயிருப்பதைப் பிரித்தாவது, பிரியாமலாவது வேறு பொருள் கூறவேண்டும். அதுவே மடக்கிற்குரிய விதியாகும்.

அம் கோங்கம் இருப்பையின் பைந்துணர் இற இறவு அங்கு ஓங்க - அழகிய கோங்க மரங்களினும் இருப்பை மரங்களினும் உள்ள பசிய பூங்கொத்துகள் ஒடியுமாறு செய்து, இறால் மீன்கள் அங்கே உயர்ந்து துள்ளவும், எரி மின்மினி எனப் புறவம் மேய்ந்த சுரம் விட்டு நெருப்பை மின்மினி என நினைத்துப் புறா என்னும் பறவைகள் மேய்ந்த பாலைவனத்தைக் கடந்து, பூ புனல் ஆறு போய்ச் செழும் புறவம் ஏய்ந்தது - அழகிய சரயு என்னும் யாறானது சென்று செழித்த முல்லைநிலத்திற் சேர்ந்தது. அரோ: அசை. 'புறவம்' என்பது புறாக்கள் எனவும், முல்லை நிலம் எனவும் பொருள் தந்தது காண்க.மேய்ந்தது என்றும் ஏய்ந்தது என்றும் பிரித்துப் பொருள் கொள்ளுமாறு இயைத்திருப்பதையும் காண்க.

புலமையில் வலமையுடையாரே இத்தகைய கவிபாடத் தக்கோராவார். ஏனையோர்க்கு இவ்வாறு பாடுதல் எளிதன்று. 'செவ்வணந்திகழ்' (நாட்டுச் 42) என்ற கவியில் 'உழத்தியர் தம் முகம், பாதம், செங்கை போன்ற தாமரை, கண்கள் போன்ற குவளை, வாய் போன்ற செவ்வல்லி வயலிற் களையாகத் தோன்றுவதால் அவற்றைக் களைந்தெறியாது நின்றார்கள்' என்ற பொருளமைத்திருக்கின்றார். இது கம்பர் "பண்கள் வாய்" (நாட்டுப். 10) என்ற கவியின் கருத்தும், திருத்தக்கதேவர் "கண்ணெனக் குவளையும்" (சிந்தா. 51) என்ற கவியின் கருத்துங் கண்டு சிறிது மாறுபடுத்தி யமைத்ததாகும். தேவர், "உழவர் தம் மனைவியர் உறுப்புகள் போலத் தோன்றலால், குவளை முதலியவற்றைக் களைந்தெரியாது நின்றார் உழவர்தந் தன்மை யின் னதே" என்று முடித்தார். கம்பர், அக்கருத்தினை "பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்" என வேற்றுப் பொருள் வைத்து முடித்தார். இந்நூலாசிரியர், சிறிது வேறுபடுத்தி, உழத்தியரே தம்முறுப்புகள்போலக் குவளை முதலியவை தோன்றலாற் களைந்தெறியாது நின்றார்; என முடித்தார். சிந்தாமணி, கம்பராமாயணம் முதலிய பெருங்காப்பியங்களைக் கற்றுணர்ந்தவர் இவர் என்பது இதனால் அறியலாம்.

நகரச்சிறப்பில் 16 ஆம் கவியில் "அட்டுண் பாரன்றி யாதுலரின் மையால், இட்டு உணாக்குறையென்பதோ ரேக்கமே" என இரப்பா ரொருவரும் அந்நகரில் இலர் ஆதலால், பிச்சையிட் டுண்ணாத குறையே அந் நகர் மக்கள்பால் எனச் செல்வச்சிறப்புக் கூறியது, கம்பர், "வண்மை யில்லையோர் வறுமை யின்மையால்" எனவும், "கொள்வா ரிலாமைக்


புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 17:32:44(இந்திய நேரம்)