தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


போலும்!' என்று பேசினர் சிலர்; 'கொலைகாரி இவள்தானா? நம் மன்னன் மகனைக் கொன்றவளா?' என்று கூறிப் பின்றொடர்ந்தனர் சிலர்; இவளைப் பற்றி யெடுத்து யானைக்கு முன் போடுங்கள் !' என்றார் சிலர்; 'இப் பறையனா கொல்லவேண்டும்! நம் ஆயுதங்கள் கொல்லாவோ?' என்று சொல்லத் துணிந்தார் சிலர்; 'நீங்கள் கொல்வது அரசநீதிக்கு வழுவாம்' என்று கூறி விலக்கினர் சிலர்; 'அரசன் மகனைக் கொன்ற படுபாவி ஆயின், நம்மவரையுங் கொல்வாள் இவள்! கண்ணோக்கினாலும் உயிரைக் கவர்வாள்போலத் தெரிகிறது! இவள் முன் நில்லாதீர்? விலகுங்கள்!' என மொழிவார் சிலர்; 'மன்னன் மகனைக் கொன்ற அரக்கியாயிருந்தால் இவர்கள் கைக்கு அகப்பட்டு வருவாளோ? வானில் மறைந்துகொள்வாளே! ஏன் மறையாமலிருந்தாள்? அப் பாலனை இவள் கொன்றவளல்லள்; இப் பாவி தலையில் எல்லாரும் கட்டிவிட்டார்கள்! விதியும் இவ்வாறு விளைந்ததுபோலும்!' என்றனர் சிலர்; 'இக் கொலைகாரியை முன்னர்க் கொண்டுவந்து விலை கூறி விற்றவன் இவன் ஆதலால், இவனும் கொலைகாரன்! பசுவையும் கொலை செய்யும் புலையன் இவளைக் கொலை செய்யாமலா விடுவான்? 'என்றனர் சிலர்; உடனே சிலர் 'விற்றவன் இவன்தான் என்றால், வெட்டாமல் விட்டுவிடவும் கூடும்! தொடர்ந்துபோய்ப் பாருங்கள்!' என்றனர் சிலர்; 'இந்தப் பெண் பழியை நம்மரசன் ஏற்றுக்கொண்டனனே! அறத்திற்கு உறையுளானவன் அல்லனோ நம் மரசன்! இனி இதனை எடுத்துக் கூறுவார் யார்?' என்று வருந்தினர் சிலர்; 'காவலர் வன்மையாகக் கூறிக் கொலை செய்தனரெனக் காட்டினர்போலும்! மன்னன் இவளைக் கொலை செய்யுமாறு பணித்தான்! இவள் கொலை செய்யாமலிருந்தால் இவளைக் கொன்ற பாவம் அரசனைத் தானே சேரும்? இப்போது கொல்லாமற் சிறையில் வைத்திருந்தால் பின் இச் செயல் நன்றாக விளங்கியபோது கொல்லலாம்; அல்லது விட்டிடலாம்; அவ்வாறு செய்யாதது பிழை' என்றும் உரைப்பார் சிலர்; 'இவள் பிறந்த ஊர் எதுவோ? இங்கு வந்த காரணம் எதுவோ? இப் பெண் என்ன அறிவுடையவளோ? இவளைப் பிறப்பித்துவிட்டாய்! விலை கூறி விற்கச் செய்தாய்! கொலைகாரியாக்கி விட்டாய்! விதியே! நீ மிகவும் கொடியாய்!' என்று பலர் புலம்பினர்; 'அங்கே ஓரிடத்தில் அடித்த அடிக்கு இங்கே தடித்தது தடிப்பு என்பதுபோல இருக்கிறது! எங்கே பிறந்தவளோ, எங்கே வளர்ந்தவளோ, எங்கே இருந்தவளோ, இங்கே இறந்து மறைய வந்தாள் போலும்! திருமகள்போல விளங்கும் பேரழகுடைய மங்கை இவள் கொலை செய்வாளோ?' என்று கூறினர் சிலர்" என்று பலவாறு நகர மக்கள் மனப்பான்மையை வகுத்துக் கூறி வருவது நோக்குவார்க்குப் புலவர் உள்ளத்திற் பரந்துகிடந்த உலகியலறிவு முழுவதும் வெளிப்பட்டதாகத் தோன்றும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 17:40:01(இந்திய நேரம்)